கோழி இறைச்சி – முட்டை : அதிரடி சட்டங்கள்
இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்கான சட்டங்களை எதிர்காலத்தில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்இ அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்தையில் மீனின் விலை அதிகரித்துள்ள நிலையில், கோழி இறைச்சி வியாபாரிகளும் விலையை அதிகரித்துள்ளனர். அதீத இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் கோழி இறைச்சியை குறைந்த விலையில் பொது மக்களுக்கு வழங்குவதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்