கோழி இறைச்சி கடை ஒன்றுக்கு சீல் வைப்பு!

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர்களினால் ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான முறையில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக ஹப்புத்தளை சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, குறித்த கோழி இறைச்சி கடையினை சோதனைக்கு உட்படுத்திய போது கோழி இறைச்சி கடையில் இருந்து மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த கோழி இறைச்சி கடை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும், குறித்த கோழி இறைச்சி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் பரோகன் விஜயவர்தன தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்