கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு: பிஸ்கட்டுக்கு என்ன செய்தோமோ அதையே செய்வோம்!

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் கிடைத்த பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோழி இறைச்சி விற்பனையாளர்களை எச்சரித்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து இகோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அடுத்த வாரத்திலிருந்து கோழி இறைச்சி வாங்குவதை தாம் புறக்கணிக்கணிக்கவுள்ளதாகவும் பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்தோமோ அதையே இப்போதும் செய்வோம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இப்போதுள்ள இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்ட முயற்சிக்க வேண்டாம். அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட பழவகைகளின் விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவு அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு கிலோகிராம் திராட்சையின் விலை ரூ.2,690 அப்பிளின் விலை ரூ. 2,500 ஆகவுள்ளதுடன் உள்நாட்டு பழவகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அசேல சம்பத் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்