கோட்டாபய ராஜபக்ஷவிடம் 3 மணிநேரம் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வெள்ளிக்கிழமை 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்படி அவர் இன்று முற்பகல் 10.45 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஏலவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24