கொழும்பை வந்தடைந்த இந்திய முட்டைகள்

இந்தியாவில் இருந்து முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று புதன்கிழமை இரவு ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய குறித்த கப்பல் வந்தடைந்துள்ளது.

ஆய்வக சோதனைகளுக்காக கையிருப்பில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இன்று வியாழக்கிழமை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதவேளை தேவையான அனுமதியின்றி இரண்டு மில்லியன் முட்டைகள் இன்னும் துறைமுகத்தில் உள்ளதாகவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டால், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடிய வகையில், அவற்றை வெளிச் சந்தைக்கு வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்