கொரோனா தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் தீர்மானங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்பட்டன
இலங்கையில் கொரோனாவினால் 3,634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
சுகாதா அமைச்சின் தகவல்களின்படி இதில் 1,409 பெண்களும் 2,225 ஆண்களும் அடங்குகின்றனர்.இன அடிப்படையில் 2,992 இஸ்லாமியர்கள், 287 பௌத்தர்கள், 270 இந்துக்கள், 85 கத்தோலிக்கர்கள் இதில் அடங்குவதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்