கொரோனாவில் இறந்தவர் 2 ஆண்டுகளின் பின் உயிருடன்
இந்தியாவில் கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்து குடும்பத்தினரால் இறுதி மரியாதை செய்யப்பட்ட நபர் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்துள்ளார்.
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஷ் படிதார் ( வயது – 35 ). இவர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில், இவரது உறவினர்களிடம் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் இவரது இறுதி சடங்கை அப்போதைய விதிமுறைகளின் படி மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இறந்து விட்டதாக நினைத்த இவர் ஏப்ரல் 15 ஆம் திகதியன்று அவரது வீட்டிற்கு வந்துள்ளார் . கமலேஷ் படிதார் இறந்து விட்ட நிலையில் இது பேய் தான் வந்துவிட்டது என அச்சமடைந்த இவருடைய குடும்பத்தினருக்கு தான் உயிருடன் வந்திருப்பதை விளக்கியுள்ளார்.
குடும்பத்தினருக்கு கமலேஷ் படிதார் உயிருடன் வந்தது மகிழ்ச்சியென்றாலும் என்ன நடந்தது? மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்தது? என கமலேஷ் படிதாரின் குடும்பத்தினர் கன்வான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் இப்பிரச்சனைக் குறித்து முழுமையான தகவல்களைப் பெற வேண்டும் என்பதற்காக கமலேஷ் படிதாரிற்கு என்ன நடந்தது? என பொலிஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காலத்தில் உயிரிழ்ந்தவர்களுக்கு இறுதி சடங்கை மருத்துவமனை நிர்வாகமே மேற்கொண்டது. விதிமுறைகளின் படி உடல் முழுவதும் பாதுகாப்போடு எடுத்துவரப்பட்டதால் முகம் தெரிய வாய்ப்பில்லை. இதனால் உயிரிழந்தவரின் பெயரை மாற்றிச்சொல்லியிருக்கலாம் என்று கருத்தப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்