கைத்தொலைபேசி

கைத்தொலைபேசி

ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச பயன்படுத்திக்கொள்வதே தொலைபேசி எனப்படும் .

 

இதன் மூலம் கதைப்பது மட்டுமல்லாமல் செய்திகள் அனுப்பவும் ஒளிப்படங்கள் எடுக்கவும் அதை இன்னொருவருக்கு அனுப்பவும் பாடல்கள், செய்திகள் கேட்பதற்கும் விளையாட்டுக்களை விளையாடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

உறவினர்களதும் முக்கியமானவர்களதும் விலாசங்கள்,தொலைபேசி இலக்கங்கள்,அவர்களது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நாட்களையும் இலகுவாக இதில் பதிவு செய்து வைக்கலாம்.

நன்மைகள் இருந்தாலும் கைத்தொலைபேசியால் தீமைகளும் ஏற்படுகின்றன.

அதிகமாகக் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு  அதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் (electronic waves) மூளை சம்பந்தமான நோய்கள், மூளைப் புற்று நோய், காது கேட்டலில் பிரச்சினைகள்,உறக்கம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

வாகனம் ஓட்டும் போது பலர் கைத்தொலைபேசியில் பேசிய வண்ணம் செல்வதால் அதிகமான விபத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்