குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் படுகாயம்
நுவரெலியா பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை செடிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது, தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தோட்டத் தொழிலாளியின் கால் மோதியதை அடுத்து, குளவிகள் கலைந்து கொட்டியுள்ளன.
இதன்போது 09 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக, தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கூடு கட்டி உள்ளன, தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கொட்டி உள்ளமையால், தேயிலை கொழுந்து பறிப்பதை நிர்வாகம், இன்று வியாழக்கிழமை நிறுத்தியுள்ளது.