குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பெண் தோட்டத் தொழிலாளர்கள்
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று சனிக்கிழமை மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனவும், ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேயிலை மலைக்குள் இருந்த குளவிக்கூடொன்று, கொழுந்து கொய்த பெண்ணொருவரின் காலில் பட்டு கலைந்ததாலேயே குளவிக்கொட்டு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்