குளவிக்கொட்டுக்கு இலக்காகி 22 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி

குருணாகல் – பொயவலான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியின் பாடசாலை ஒன்றில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியதாக பொயவலான பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின் மைதானத்துக்கு அருகிலிருந்த மரத்தில் உள்ள குளவிக் கூடு கலைந்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 22 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த மரத்தில் உள்ள குளவிக் கூட்டை அகற்றுமாறு வன விலங்கு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொயவலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்