கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் அப்புத்துரை (வயது 73) என்ற முதியவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்