காற்று மாசுபாடு: மூடப்படும் பாடசாலைகள்

பாகிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரான லாகூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் ஒரு வாரத்துக்கு பாடசாலைகளை மூடப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

14 மில்லியன் மக்கள் வாழும் நகரில் பல நாட்களாக காற்றின் தரம் மோசமாகியிருக்கிறது.

அடுத்த 6 நாள்களுக்குக் காற்றின் தரத்தில் மாற்றம் இருக்காது என்று வானிலை முன்னறிவிப்பு காட்டுகிறது.

அதனால் தொடக்கப் பாடசாலைகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலைகளில் முகக்கவசம் அணியப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்