காதல் மனைவிக்காக 4 மாதங்கள் சைக்கிளில் பயணித்து சுவீடன் சென்ற ஓவியர்

இந்தியர் ஒருவர் தனது சுவீடன் மனைவியை காண  சைக்கிளிலேயே பயணித்து சுவீடனுக்கு சென்ற நிகழ்வு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கலை மனிதர்களை எங்கிருந்தாலும் இணைக்கும் என்பதற்கு, இந்த இந்திய-சுவீடன் காதல் தம்பதியினரே பெரும் உதாரணமாக அமைந்துள்ளனர்.

சுவீடன் நாட்டை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் என்ற பெண்மணி, இந்தியர் ஒருவரின் ஓவியத்தை தனது ஓவிய கல்லூரியில் நடந்த கண்காட்சியில் பார்த்து வியந்துள்ளார். உடனே அவருக்கு அந்த ஓவியத்தை வரைந்த நபரை பார்க்க வேண்டுமென ஆவல் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 1975ஆம் ஆண்டில்  அந்த ஓவியத்திற்கு சொந்தக்காரரான பிகே மகாந்தியாவை அவர் சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் பேசி பழகி  ஒரு கட்டத்தில் காதலித்துள்ளனர். மகாநந்தியா தனது பெற்றோரிடம் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக  அனுமதி கேட்க வருமாறு தனது காதலியை அழைத்துள்ளார்

அப்போது சுவீடன் பெண்ணான சார்லோட் சேலை கட்டிக்கொண்டு வந்ததைஇ தன்னால் மறக்கவே முடியாதென மகாநந்தியா கூறியுள்ளார். பின்னர் இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சார்லோட் தன்னோடு சுவீடனுக்கு வந்து விடுங்கள் என காதலனை அழைத்துள்ளார். ஆனால் அவர் படிப்பை முடித்து விட்டு தான் வருவேன் என கூறியுள்ளார். எனவே சார்லோட் சுவீடனுக்கு சென்றுள்ளார்.

பின்னர் தனது படிப்பை முடித்த மகாநந்தியா ஒரு வருடம் கழித்து சுவீடனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரிடம் சுவீடனுக்கு செல்ல போதுமான பணமில்லை, எனவே தன்னிடமிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி என சைக்கிள் ஓட்டியே சென்றுள்ளார்.

வழியில் அவரது சைக்கிள் பல முறை சேதமடைந்துள்ளது. மேலும் அவர் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். வழியில் சிலர் அவருக்கு உணவளித்தனர் என அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் அவர் 70 கி.மீ சைக்கிளை ஒட்டியே கடந்துள்ளார். 4 மாதங்களுக்கு பின்னர் வழியில் பலர் செய்த உதவியின் மூலமும், சிலருக்கு ஓவியம் வரைந்து தருவதன் மூலமும் கிடைக்கும் பணத்தை கொண்டு அவர் இறுதியாக சுவீடனை சென்றடைந்துள்ளார்.

தற்போது அவர்கள் இருவரும் சுவீடனில் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களது காதல் கதையை பற்றிஇ ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதன் மூலம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

காதல் மனைவிக்காக 4 மாதங்கள் சைக்கிளில் பயணித்து சுவீடன் சென்ற இந்தியர்

காதல் மனைவிக்காக 4 மாதங்கள் சைக்கிளில் பயணித்து சுவீடன் சென்ற இந்தியர்

காதல் மனைவிக்காக 4 மாதங்கள் சைக்கிளில் பயணித்து சுவீடன் சென்ற இந்தியர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்