காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

காலி நெலுவ பிரதேசத்தில் காணாமல் போன குழந்தையின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2 வயது 8 மாத ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் குழந்தை காணாமல் போயிருந்த நிலையில், பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து குழந்தையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி இன்று காலை குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்