காணாமற்போன யுவதி சடலமாக மீட்பு

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமற்போன 24 வயதுடைய யுவதி நேற்று வியாழக்கிழமை கால்வாயின் கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையில் வசித்து வந்த மொஹமட் அமீன் பாத்திமா அஸ்மியா (வயது – 24) என்ற யுவதியின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 27ஆம் திகதி இரவு முதல் காணாமல் போயுள்ளதாகவும், அவர் வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறியுள்ளதாக அவரது தந்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்