கழிவறையில் பிரியாணி அரிசியை கழுவிய ஊழியர்கள்

இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணிக்கான அரிசியை கடை ஊழியர்கள் கழிவறையில் கழுவியுள்ளனர்.

தெலங்கானாவில் சித்திபேட் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு தண்ணீர் கொண்டு வரும் மோட்டார் பழுதடைந்ததால் உணவகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரியாணி அரிசியை கழுவ கழிவறை தண்ணீரை பயன்படுத்தியுள்ளதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கழிவறைக்குள் பிரியாணி அரிசி கழுவப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து உணவக ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்துள்ளார். அதற்கு ஊழியர்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை. உடனே வாடிக்கையாளர்கள் உரிமையாளரைக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு உரிமையாளரோ, “தண்ணீர் வரவில்லை, எனவே ஊழியர்கள் இங்கு சுத்தம் செய்கிறார்கள்” என்று அலட்சியமாக கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற செயல் புரிந்த ஹோட்டலை மூட வேண்டும் என்று ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்