கண்டி மாணவன் ரஷ்யாவில் சடலமாக மீட்பு

ரஷ்யா மருத்துவ பீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கண்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

கண்டியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர உயிரியல் பிரிவில் பயின்ற 24 வயது மாணவன் பெலாரஸில் உள்ள மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவர் விடுதி அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவனின் தாயார் தனது மகனுக்கு தொலைபேசி மூலம் கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்தபோது ​​அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை எனவும் இதனை தொடர்ந்து மாணவனின் தாயார் தனது மகனின் மருத்துவ நண்பர்கள் பலரை அழைத்து அவரை தொடர்புக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சக மருத்துவ மாணவர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது மாணவனின் கழுத்தில் கயிறு ஒன்றும், அறையிலுள்ள உயரமான அலுமாரியில் மறு மூலையில் கட்டப்பட்ட கயிறும் காணப்பட்டது. இது குறித்து மருத்துவ மாணவர்கள் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த மாணவன் வருடத்தின் சிறந்த மருத்துவ மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்