கடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை தாக்குதல் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்ட நிலையில், இன்னொரு படகில் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

இதன்போது வின்சன் பெனடிட் என்பவரின் படகின் மீது மூன்று தடவைகள் மற்றுமொரு படகால் மோதி அந்த படகினை மூழ்கடிக்க முனைந்துள்ளார்கள்.

இந்நிலையில் படகில் இருந்து காயங்களுடன் தூக்கி எறியப்பட்ட வின்சன் பெனடிட் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் அவருடன் தொழிலுக்கு சென்ற மீனவரால் காப்பாற்றப்பட்டார்.

அவர் காயங்களுடன் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் இடம்பெற்றுவருதுடன், மருதங்கேணி பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க