கடற்கரையில் உலாவும் முதலை

பாணந்துறை கடற்கரை பகுதியில் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் கரையோரம் உள்ள பாறையின் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை 07 அடி அளவு கொண்ட முதலை இருப்பதை கண்ட மீனவர் ஒருவர் கடலோர பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

எனினும், கடலோர பொலிஸ் அதிகாரிகள் வருவதற்குள் முதலை கடலுக்குள் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முதலையை கடற்கரையில் இருந்து அகற்றும் வரை கடலில் நீராடும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்