கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பதிவாகிய 2 கொலை சம்பவங்கள்
நாட்டில் இன்று புதன்கிழமை காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கொலை சம்பவங்களில், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பகுதியில் கடையொன்றில், நேற்று செவ்வாய்க்கிழமை 45 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கடையின் ஊழியர்கள் இருவர், கடைக்குள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவர் மற்றையவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்
தாக்குதலுக்குள்ளாகிய நபர், பலத்த காயங்களுடன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை தொடர்ந்து, பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஜா-எல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, லக்கல பிரதேசத்தில் நேற்று 44 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக, குறித்த பெண் அவரது கணவரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் லக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்