கடத்தல் முயற்சி
திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் சிறுவன் ஒருவரை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 வயது சிறுவன் ஒருவனையே இவ்வாறு கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் வீதியில் சென்ற வேளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்த முயற்சித்தாக தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் முயற்சியில் இருந்து தப்பித்த சிறுவன், அவனது ஆடை கிழிந்த நிலையில் வீட்டுக்கு சென்று நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்