கங்கை நீர் ஆய்வு: காத்திருந்தது அதிர்ச்சி
இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து நபர் ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.
இதன்போது, அந்த கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது. எனினும், அதனை நம்ப மறுத்த அவர் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த நீரைக் கொடுத்து ஆய்வு செய்துள்ளார்.
அங்கு அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை மேற்கொள்ளபட்ட போதும் கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்று மீண்டும் தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து அந்த நீரை மேலும் நான்கு நாட்கள் கழித்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போதும், அதில் ஒரு நுண்ணுயிர் கூட உருவாகவில்லை.
பொதுவாக ஏரி, குளம், ஆறு போன்ற பொது நீர் நிலைகளில் அதிகளவில் நுண்ணுயிர்கள் இருக்கும். அல்லது உருவாகும் என்பது எனினும் கங்கை நதி நீரில் நுண்ணுயிர்கள் காணப்படாமை பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்