ஓடும் வாகனத்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!

ஓடும் வாகனத்தில் காதலன் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா-மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சாக்கிநாகா சண்டி விலி பகுதியை சேர்ந்தவர் தீபக்போர்ஸ் (வயது 33) கனரக வாகன சாரதியாக இருந்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பஞ்ச்சீலா ஜாமீதர் (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இருவரும் ஒரு முச்சக்கரவண்டியில் காட்கோபர் என்ற இடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

சாக்கிநாகா சத் நகர் என்ற பகுதியில் வந்த போது இருவருக்கும் இடையே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வந்தனர்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் போர்ஸ் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து காதலி என்று கூட பார்க்காமல் பஞ்ச்சீலா கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்தார்.

இதில் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்ட நிலையில் அவர் அலறியவாறு ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அவர் ரத்த வெள்ளத்தில் ரோட்டோரம் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது பற்றி உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸாரும் அங்கு விரைந்து வந்தனர். இதனால் பயந்து போன தீபக் போர்சும் அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பொலிஸாரிடம் இருந்து அவர் தப்பிக்கவும் முயன்றார்.

பொலிஸார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பஞ்ச்சீலா மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காயம் அடைந்த தீபக் போர்ஸ் ஆகியோரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே பஞ்ச்சீலா பரிதாபமாக இறந்தார். தீபக்கிற்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரை கைது செய்தபொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்