நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவுகள்

ஐபிஎல் 2வது இறுதி தேர்வுக்கான சுற்றுப் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். மேலும் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்ச் தொப்பியையும் வென்று கில் சாதனை படைத்துள்ளார்.

குஜராத் அணிக்கு எதிரான இறுதி தேர்வு 2வது போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணியின் துடுப்பாட்டகாரர்கள் களத்தில் இறங்கினர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.

yesterday IPL match

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 233ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து 234ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் வீரர்கள் களத்தில் இறங்கினர். 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

62 ஓட்டங்களால் வெற்றியடைந்த குஜராத் அணி இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி நாளை ஞாயிற்றுக்கிழமை (28) சென்னை அணியை எதிர்கொள்கின்றது.

Yesterday IPL

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்