
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான புதிய அறிவிப்பு
புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரமும் தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்தார்.
அதன்படி, அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு இன்று செவ்வாய்க்கிழமை முதல் புதுப்பிக்கப்படும்
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களின், நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்வதா என்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஒதுக்கீட்டை அதிகரித்ததன் பின்னரான எரிபொருள் பாவனையை ஆராயும் கூட்டம் இன்று இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.