உலக சந்தையில் தங்கம் வீழ்ச்சி: இலங்கையில் மீண்டும் குறைந்தது தங்கம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.2 சதவீதமாக குறைந்து 1909.25 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2007.66 டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்