இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார், என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் எதிர்வரும் 14ஆம் திகதி பதவியேற்பார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization, ISRO) இஸ்ரோ, இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகத்தை கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் செலவில் இஸ்ரோ நிறுவனம் இயங்குவதாக சொல்லப்படுகின்றது