6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டு தொகையை இழக்கும் இலங்கை

6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீட்டு தொகையை இழக்கும் இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பான சட்ட நடவடிக்கையை அடுத்த 45 நாட்களுக்குள் ஆரம்பிக்கத் தவறினால்,  6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் நீதி மையம் வலியுறுத்துகிறது.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் நீர்கொழும்புக்கு அப்பால் ஆழமற்ற கடலில் தீப்பற்றி அழிவுற்றது.

இதனால் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இலங்கைக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளுக்கு இழப்பீடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோருவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதி மையம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்