
இலஞ்சம் பெற்ற வருமான ஆய்வாளர் கைது
காலியில் இலஞ்சம் பெற்ற வருமான ஆய்வாளர் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மீமன பிரதேச சபையின் வருமான ஆய்வாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி, உனவடுன பிரதேசத்தில் இயங்கிவரும் முறைப்பாட்டாளருக்கு சொந்தமான உணவகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காகவே 25,000 ரூபாவை குறித்த அதிகாரி இலஞ்சமாக கோரியுள்ளார்.
காலி பகுதியைச் சேர்ந்த முறைப்பாட்டாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, நேற்று புதன்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரியை முறைப்பாட்டாளரின் உணவகத்தில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்