இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டி!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை, கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் கூட்டணியின் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிடவும் இ.தொ.கா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்