இலங்கையின் பாதாளகுழு உறுப்பினர் பிரான்சில் கைது

‘ரத்மலானே குடு அஞ்சு’ என அழைக்கப்படும் பாதாள உலக நபரான சிங்கரகே சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரத்மலானே குடு அஞ்சு என அழைக்கப்படும் சிங்கரகே சமிந்த சில்வா, பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் இலங்கை அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை பொலிஸார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்