இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கிறது யுனைடெட் பெற்றோலியம்

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளபாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் காலக்கெடு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

யுனைடெட் பெற்றோலியம் அடுத்த வாரத்தில் தொடங்கும் திகதிகளை தெரிவிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி (CBSL), முதலீட்டுச் சபை (BOI), இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்