இறந்து மிதக்கும் மீன்கள்

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று திங்கட்கிழமை காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆக்ரா ஓயா மாதத்தில்  ஒரு முறை கறுப்பு நிறத்தில்   காணப்படுவதாக மலையக சுற்றாடல் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆக்ரா ஓயாவிலுள்ள நீர் மாசடைந்துள்ளதாகவும், பல்வேறு கால்வாய்களிலிருந்து வெளியேறும் அசுத்தமான நீர், ஆக்ரா ஓயாவில் சேர்வதாலும் மீன்கள் இறந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை, இறந்து மிதக்கும் மீன்களை பிடித்துச் சென்று சமைத்து சாப்பிட வேண்டாம் என்றும், முடியுமானால் ஆற்றில் இருந்து அகற்றி புதைத்துவிட வேண்டும் என்றும் சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்