இயன் மருத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டமும் இயன் மருத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின்  வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் இயன் மருத்துவம் தொடர்பிலான வளவாளராக கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்  மல்சா ஜெயவர்தன கலந்து கொண்டார்.

மாற்றுத் திறனாளிகளின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு இயன் மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதில் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன், சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்