இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என செயற்பட்டவர் மாவை சேனாதிராஜா – றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும், தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அமரர் மாவை சேனாதிராஜா மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

யாழ் மாவட்ட மக்களினை பிரதி நிதித்துவம் செய்து அவர்களின் பல்வேறு தேவைகள் தொடர்பிலும், அது போன்று அம்மக்களது பாதுகாப்பு தொடர்பிலும் தொடர்ந்தும் குரல் கொடுத்துவந்த ஒரு சிறந்த மனிதராகவும், அரசியல் ரீதியில் குறுகிய சிந்தனைகள் அற்ற பரந்த பார்வையினை கொண்ட ஒருவராகவும் அமரர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களை அடயாளம் காணுகின்றேன்.

குறிப்பாக வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் அதிலும் யாழ் மாவட்ட முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போது கண்ணீர் கலங்கிய ஒருவராகவும், இந்த வெளியேற்றத்தினை விரும்பாத ஒரு அரசியல் தலைவராக தனது சகோதர சமூகத்தின் உணர்வுகளிலும் இரண்டரக் கலந்த ஒருவராக அமரர் மாவை சேனாதிராஜா அவர்கள் இருந்துள்ளார்கள்.

இந்த நிலையில் தனது 83 வயதில் இயற்கை எய்திய அமரர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் இந்த இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் தீர்மானங்களிலும் பெரும் இடை வெளியினை தோற்றுவிக்கும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், அவரது இழப்பால் துயர்வுறும் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தனது அழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172