ஆவி அச்சத்தால் இடிக்கப்படும் பள்ளிக்கூடம்

இந்தியா – ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் கடந்த 2ம் திகதி மாலை ஏற்பட்ட வரலாறு காணாத ரயில் விபத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய கோர விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கோர விபத்தில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சேதமடைந்துள்ளது. அவற்றை பாதுகாப்பாக பதப்படுத்தி வைக்க பாரதீப் துறைமுகத்தில் இருந்து 5 கொள்கலன்களை ஒடிசா அரசு வாங்கியுள்ளது. முதலில் விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்கள் அருகே உள்ள இடங்களில் கொண்டு வைக்கப்பட்டன.

முக்கியமாக, பஹானகா என்ற பகுதியில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் தான் 200க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அங்கிருந்து உடல்கள் அகற்றப்பட்டன. அந்த பள்ளி கோடை விடுமுறை முடிந்து ஜூன் 16ம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளது.

ஆனால், பிணங்களை குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால் அந்த பள்ளிக்கு வர மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பயப்படுகின்றனர். அங்கு உயிரிழந்தவர்களின் ஆவிகள் உலாவுமோ என பலரும் பீதியில் உள்ளனர். பள்ளிக்கூடத்தை இடித்து புதிதாக கட்டினால்தான் வருவோம் என பெற்றோர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. முதலில் இதற்கு மாவட்ட ஆட்சியர் தத்தாரய பஹுசாகேப் ஷிண்டே தயக்கம் காட்டினார்.

பெற்றோர்களை சமாதானம் செய்ய அரசு தரப் முயற்சி செய்து பார்த்தது. ஆனால்இ தேவையில்லாமல் பயம் மக்களிடையே பரவுவதை கருத்தில் கொண்டு பள்ளியில் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளை இடிக்கும் வேலை தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்