ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி!
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தின், குணா மாவட்டத்தில் சுமார் 140 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் 10 வயதுடைய சிறுவன் கடந்த சனிக்கிழமை வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுவனை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி, குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆழ்துளை கிணற்றில் குறித்த சிறுவன் சுமார் 39 அடி ஆழத்தில் சிக்குண்டிருந்த நிலையில், அவரை மீட்பதற்காக 22 அடி ஆழமான குழி தோண்டப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos