ஆபாசபட நடிகைகளில் மியா கலிஃபா ஏன் பிரபலமானவர்?

மியா கலிஃபா என்ற நடிகையை அறியாதவர்கள் பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம்,  இவர் நீலப்பட (BlueFilm) நடிகையாக பிரபலமானவர்.

பொதுவாக சினிமா துறையை எடுத்துக்கொண்டால் தமிழ் உட்பட அனைத்து மொழி சினிமாவிலும் அபாசபட நடிகைகள் இருக்கிறார்கள் . ஆனால் மியா கலிஃபா ஒரு ஆபாசபட நடிகையான இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

அவர் பிறந்த நாடு மற்றும் அவரைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள், பிரச்சினைகள் காரணமாகத்தான்  மியா கலிஃபா மிகவும் புகழ்பெற்ற நீலப்பட நடிகையாக  திகழ்கிறார்.

லெபனான் என்ற  இஸ்லாமிய மதத்தை  தேசிய மதமாகக் கொண்ட  ஒரு சிறிய நாட்டில் பிறந்தாா் மியாகலிஃபா.

சிறுமியாக இருக்கும்போதே அமெரிக்காவிற்கு, அவர் குடும்பம் குடிபெயர்ந்ததால்  அமெரிக்க கலாச்சார வாழ்வியலை மேற்கொண்டார். ஆனாலும், தனது பூர்விகமான லெபனானை மறக்காத மியா கலிஃபா, அந்நாட்டு தேசியகீதத்தின் சிலவரிகளைத் தன்னுடலில் பச்சை குத்திக்கொண்டார்.

21 வயதில்  ஆபாசப்படங்களில் நடிக்கும் தொழிலை, பெற்றோர் எதிர்த்தபோதும் மேற்கொண்டார். இதனால் பெற்றோர்  இவரைப் புறக்கணித்தனர்.

இவருடைய முதல் ஆபாசப்படமே மிகவும் பிரபலமடைந்தது. அதைப் பார்த்தவர்களில் நான்கில் ஒரு பங்கினர் லெபனானியர்தான்.

மதவாதக்கெடுபிடிகள் நிறைந்த தங்கள் நாட்டுப் பெண்ணொருத்தி, வேறுநாடுசென்று ஆபாசப்பட நடிப்புத்தொழிலை மேற்கொண்டதை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தனர்.

இவர்களுடைய ஆதரவும், மியா கலிஃபாவின் அழகும், தொழில் திறமையும்  அவருக்கான ஆதரவாளர்களை நாளடைவில் அதிகரித்தன.

மூன்று மாதங்களில், சில ஆபாசப்படங்களில் நடித்த மியா கலிஃபா,  ஹிஜாப் அணிந்தபடி ஒரு ஆபாசப்பட காணொளியில் நடித்தது  இவரை மிகவும் பிரபலமாக்கினாலும், இது இஸ்லாமிய நாடுகளில் கடும் சர்ச்சையானதாலும், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர், இவருக்கு கடும்அச்சுறுத்தல் விடுத்ததாலும்  அத்தொழிலை விட்டு விலகிவிட்டார்.

தற்போது, மியா கலிஃபா தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

குறிப்பிட்ட சில ஆண்டுகளில் மட்டுமே  இவருடைய இணையதளப்புகழ் உச்சத்திலிருந்தது. மியா கலிஃபா தற்போதும் பிரபலமானவராக இருந்தாலும்  பழைய அளவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்