அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார்.
கமலா ஹரிசினை தோற்கடித்து டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி வெற்றியை பெற்றுள்ளார் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,
இது அமெரிக்காவின் பொற்காலமாக அமையும், இது அமெரிக்க மக்களிற்கு மிகவும் அற்புதமான வெற்றி,இது அமெரிக்காவை மிகப்பெரியதாக்க உதவும்.
நீங்கள் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கருதுவீர்கள்.
அமெரிக்கா எங்களிற்கு மிகவும் வலுவான முன்னொருபோதும் இல்லதா ஆணையை தந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்