அஞ்சலோ மெத்யூஸ் ஹட்ரிக் சாதனை

அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரின் நோர்தர்ன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அஞ்சலோ மெத்யூஸ் ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியின் இறுதி ஓவரில் மோயின் அலி, பெசில் ஹமீட் மற்றும் கொயஸ் அஹமட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தநிலையில், நோர்தர்ன் வாரியர்ஸ் அணி இந்த போட்டியில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்