விரல் நகத்தில் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்

விரல் நகத்தில் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்

விரல் நகத்தில் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்

💢நமக்கு என்ன நோய் உள்ளது என்று தெரிந்து கொள்ள மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இல்லை நம் நகங்களை பார்த்தே நமக்கு என்ன நோய் என்பதை தெரிந்து கொள்ள முடியும். நகங்களை பார்த்து நமக்கு என்ன நோய் இருக்கும் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை பற்றி இப்போது நாம் பார்ப்போம்.

இதய நோய்:

🔸உங்கள் நகங்களில் ஏதேனும் சிவப்பு அல்லது செம்பழுப்பு கோடுகள் அல்லது புள்ளிகள் இருந்தால் அவற்றை ளுPடுஐNவுநுசு ர்நுஆழுசுசுர்யுபுநுளு என்று அழைக்கின்றனர். ஒருவருக்கு இதய வால்வுகளில் தொற்றுகள் அல்லது இரத்த நாளங்களில் வீக்கங்கள் ஏற்படும்போது நகங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது.

🔸மேலும் பிறவி இதய குறைபாடு உள்ளவர்களின் நகங்கள் உப்பிய நிலையில் வட்டமாகவும்இ அகலமாகவும் காணப்படும். எனவே இவ்வாறு அறிகுறிகள் காணப்பட்டால் கட்டாயமாக ஒரு இதய நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

சர்க்கரை நோய்:

🔸நகங்களின் அடிப்பகுதியில் நீல நிறத்தை கண்டால், அது இன்சுலின் குறைபாடு அல்லது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் சர்க்கரை உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளவும்.

சரும புற்று நோய்:

🔸உங்கள் நகங்களில் கருமையான பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால், அது மெலனோமாவிற்கான (சரும புற்று நோய்) அறிகுறியாகும். சரும புற்றுநோய்க்கான சந்தேகம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இதுப்போக உங்கள் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரித்துக் கொள்ளவும். இது உங்கள் அணுக்களில் உள்ள இயக்க உறுப்புகளின் பாதிப்புகளை தடுக்க உதவும்.

மூட்டுவலி:

🔸உங்கள் நகங்கள் பலவீனமாக இருந்தால் அது osteoarthritis என்னும் மூட்டுவலி நோய்க்கான அறிகுறிகள் ஆகும். அதே போல் நகங்களில் சிறிய குழிகள் அல்லது வரிகள் இருந்தால் அது psoriatic arthritis என்ற நோய் தாக்கியுள்ளதாக அர்த்தமாகும்.

🔸அதே போல் நகங்களை ஒட்டியுள்ள தோல்களில் வீக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அது lupus என்ற நோய் தாக்கியுள்ளதாக அறிகுறிகளாகும். மேலும் நகத்தின் அடித்தளத்தில் சிவப்பு நிறத்தில் பிறை போன்று வடிவம் தோன்றினால் அது rheumatoid arthritis என்னும் நோயின் அறிகுறியாகும்.

🔸அதே போல் நகங்கள் தானாகவே சிதைந்து, உடைந்து உதிர்வதை onychomadesis என்று அழைக்கப்படுகிறது. எனவே இவ்வாறெல்லாம் தங்களது நகத்தில் அறிகுறிகள் இருந்தால் உடனே மூட்டுவலி சிகிச்சை மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

இரத்த சோகை:

🔸குறிப்பாக இருப்பு சத்து குறைப்பாட்டினால் ஏற்படும் இரத்த சோகையின் காரணமாக, நகங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். ஊட்டச்சத்து குறைப்பாடு அதிகரிக்கும் போது நகங்கள் மெலிவதோடு, நகத்தட்டுகளில் உட்குழிகள் தோன்றுவதோடு செங்குத்து முகடுகளாக காணப்படும்.

நுரையீரல் கோளாறுகள்:

🔸உங்கள் விரல் அடர்ந்த நீலநிறமாக இருந்தால் உங்களுக்கு நுரையீரல் சம்மந்தமான கோளாறுகள் இருக்கின்றது என்று அர்த்தமாகும். நுரையீரல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு நகங்கள் மற்றுமின்றி உதடுகளும் அடர்ந்த நீலநிறமாக காணப்படும்.

🔸குறிப்பாக ஆஸ்துமா, ஹீமோகுளோபின் குறைவு, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய், நிமோனியா, எம்பிசிமா மற்றும் நாள்பட்ட மூச்சி குழாய் அழற்சி போன்ற சுவாசநோய் உள்ளவர்களுக்கு நகங்களும், உதடுகளும் அடர்ந்த நீலநிறத்தில் காணப்படும்.

🔸எனவே இவ்வாறு தங்களுக்கும் நகங்கள் அல்லது உதடுகள் நீலநிறத்தில் காணப்பட்டால் உடனடியாக சுவாச நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

கவலை மற்றும் மன அழுத்தம்:

🔸பதட்டம், மன அழுத்தம், கவலை போன்றவற்றை ONYCHOPHAGIA என்று சொல்லப்படுகிறது. எனவே தொடர்ந்து தினமும் நகத்தை கடித்து கொண்டே இருந்தால் வாயின் வழியாக நோய் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நகம் கடிப்பதை தவிர்க்க கசப்பான திரவங்களை நகத்தில் தடவலாம் அல்லது அதற்கான தடுப்பு வழிகளை கடைபிடிக்கலாம்.

தைராய்டு:

🔸உங்கள் கைகள் நகமானது நக படுக்கையில் இருந்து தளர்ந்து அல்லது பிரிந்துவிடும் நிலை ஏற்பட்டால் அது ONYCHOLYSIS என்று அழைக்கின்றனர். இந்த ONYCHOLYSIS பெரும்பாலும் கைளின் மோதிரவிரல் மற்றும் சுண்டு விரல்களில் ஏற்படுகிறது. ஒருவருக்கு தைராய்டு கோளாறுகள் அதிகரித்து உள்ளது என்றால் ONYCHOLYSIS என்னும் இந்த கோளாறுகள் ஏற்படும்.

🔸நகங்களில் அதிக இடைவெளி விழுந்துவிட்டால் அழுக்குகள் மற்றும் மண் நுழைந்து நகங்களில் நோய்களை ஏற்படுத்தும். அதேபோல் நகங்களில் உட்குழிகள் விழுந்தாலும் தைராயிடு பிரச்சனை உள்ளது என்ற அறிகுறிகளாகும்.

விரல் நகத்தில் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்