விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயம்!

விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயம்! ,மன்னம்பிட்டிய, அரலகங்வில வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னம்பிட்டிய – அரலகங்வில வீதியில் குடாகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராணுவ வீரர்கள் பயணித்த டிபெண்டர் வாகனம் மரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மகா ஓயா பகுதியில் பயிற்சி நடவடிக்கைக்கு சென்றுவிட்டு மின்னேரியா நோக்கி திரும்புகையிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

டிபெண்டர் வாகனத்தைச் செலுத்தியவருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.