முழங்கையில் உள்ள கருமை நீங்க எளிய வழிகள்
முழங்கையில் உள்ள கருமை நீங்க எளிய வழிகள்
முழங்கையில் உள்ள கருமை நீங்க எளிய வழிகள்
⬛நாம் அனைவருமே அழகாக இருக்க விரும்புவோம். அதற்காக சரும அழகை மேம்படுத்த பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் நாம் பெரும்பாலும் முகம், கை, கால்களுக்கு தான் அதிக பராமரிப்புக்களைக் கொடுப்போம். இதனால் இப்பகுதிகள் அதிக கருமையாக இருக்காது. ஆனால் உடலிலேயே நாம் அதிகம் பராமரிப்புக்களை கொடுக்காத பகுதி என்றால், அது முழங்கைகள் தான்.
⬛இந்த முழங்கையில் உள்ள கருமையைப் போக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அதுவும் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தியை கொண்டுள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முழங்கையில் உள்ள கருமையை போக்கி, வெள்ளையாக்கலாம். அந்தவகையில் அது என்ன இயற்கைப் பொருட்கள் என்பதைப் பார்ப்போம்.
🔹மஞ்சள் இயற்கையாகவே சரும கருமையைப் போக்கும் பண்புகளை கொண்டது. அந்த மஞ்சள் தூள் சிறிது எடுத்து, பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக இருக்கும் முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய முழங்கை கருமை காணாமல் போகும்.
🔹உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், முழங்கையில் இருக்கும் கருமையை வேகமாக மறையச் செய்யலாம்.
🔹நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை முழங்கை பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்இ முழங்கையில் உள்ள கருமை நீங்கும்.
🔹கற்றாழை ஒரு அற்புதமான மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, சரும கருமையைப் போக்கும் திறன் கொண்டது. அந்த கற்றாழை ஜெல்லை முழங்கையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
🔹எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளதால், இவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சரும கருமை விரைவில் நீங்கும். அதற்கு சிறிது எலுமிச்சை சாற்றினை எடுத்து, அவற்றை கருமையாக உள்ள முழங்கையில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
🔹வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சரும கருமையைப் போக்க வல்லது. இத்தகைய வினிகருடன் தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முழங்கை கருமை மாயமாகும்.
முழங்கையில் உள்ள கருமை நீங்க எளிய வழிகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்