மதுவரித் திணைக்களத்திற்கு வருமான நிர்வாக முறைமை
மதுவரித் திணைக்களத்திற்கு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வருமான நிர்வாக முறைமையொன்றை நிறுவுவதற்காக பெறுகை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக 2024.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைமை மூலம், தடையின்றி தரவுப் பரிமாற்றல், இடர் முகாமைத்துவம், வருமான சமநிலைப்படுத்தல், உயரிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த வருமான முறைமையைப் பெறுகை செய்வதற்காக தனிப் படிமுறை இரண்டு கடித உறை முறையின் கீழ் தேசிய போட்டி விலைமுறி முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, மதுவரித் திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமையைத் தயாரித்தல், அபிவிருத்தி செய்தல், அமுல்படுத்தல் மற்றும் பராமரிப்புச் செய்வதற்காக திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.