மண்மேட்டுடன் மோதிய வேன்: இருவர் பலி,10 பேர் காயம்

பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை – விஹாரகல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்த நிலையில் தியதலாவை மற்றும் பங்கெட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரேக் தொகுதி தொழிற்படாமையினால், குறித்த வேன் மண்மேடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.