மட்டக்களப்பில் சுனாமியில் உயிர் நீத்தவர்களின் 20 ஆவது ஆண்டினை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

புதிய கோட்டை முனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவின் பிரதான மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 07.30 மணியளவில் ஆரம்பமாகி 2 மணியளவில் நிறைவுக்கு வந்தது.

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் வைத்தியர் கீர்த்திகா மதனழகன் தலைமையில், தாதி உத்தியோஸ்தர்கள், வங்கியின் ஊழியர்களுடன் இவ் இரத்ததான முகாம் திருப்திகரமாக இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சுடரினை ஏற்றி இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததோடு அரச உத்தியோஸ்தர்கள், கழகத்தின் உறுப்பினர்கள், இளைஞர், யுவதிகள், என பலரும் இந்த இரத்ததான முகாமில் சுயமாக இணைந்து கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

கொடையாளிகள் ஒவ்வொருவருக்கும் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்