ப்ரோக்கோலி பயன்கள்

ப்ரோக்கோலி பயன்கள்

ப்ரோக்கோலி பயன்கள்

🟩பச்சை பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். இந்த ப்ரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். அதிகமான சத்து நிறைந்துள்ள காய்கறிகளில் ப்ராக்கோலியும் உள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவில் அதிக அளவு ப்ராக்கோலியை பயன்படுத்தி வந்தனர். முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்தது.  ப்ரோக்கோலியில் ஃபைபர், பொட்டாசியம், இரும்பு, காப்பர், ப்ரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கே, சி, கே சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் ப்ராக்கோலியின் என்ன என்ன நன்மைகள் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

🥦நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.

🥦ப்ராக்கோலியில் உயிர்வளியேற்ற எதிர்ப்பு பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன்கள் மற்றும் சியாசந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

🥦ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதாகவும், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது.

🥦ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் குர்செடின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

🥦பைபர் நிறைந்த ப்ரோக்கோலி செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இது வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை ப்ரோக்கோலியை சாப்பிடுவது நல்லது.

🥦ப்ரோக்கோலியில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ளது. இந்த நார்ச்சத்து நமது பித்தப்பையில் சுரக்கும் பித்த அமிலங்களையும் செரிமான உறுப்புகளில் படியச் செய்து உண்ணும் உணவில் இருக்கின்ற அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்து உடல் நலனை பாதுகாக்கிறது.

🥦ப்ரோக்கோலியில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும் இது மற்ற காய்கறிகளை விட அதிக புரதத்தையும் கொண்டுள்ளது. எனவே ப்ரோக்கோலி ஒட்டுமொத்த இதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

🥦ப்ரோக்கோலி வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் 8 மாதக் குழந்தை முதல் முதியோர்  வரை அனைவரும் இதனை வாரத்தில் 2 முறையாவது எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.

🥦பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ராக்கோலி மிகவும் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் ஆகியவை தான் அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.

🥦ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களுக்குப் பகைவனாக உள்ளது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகும்; தோல் பளபளப்பாகும்.

ப்ரோக்கோலி பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்