போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

இலங்கைக்கு கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுகிழமை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேஷியாவை சேர்ந்த 42 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

8 ஆங்கில சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டைக்குள் இருபத்து மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 4 கிலோ கிராம்  598 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை கொண்டுவர முயற்சித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்