டிராகன் பழம் நன்மைகள்
🔺🔻டிராகன் பழம் பார்ப்பதற்கு டிராகன் முட்டை வடிவத்தில் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வைத்துள்ளனர். இது கற்றாழை குடும்பத்தை சார்ந்தது. மெக்சிகோவில் இந்த பழம் பயிரிடப்படுகிறது. இப்பொழுது தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது. இந்த பழம் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. கிவி பழம் போன்ற உள் தோற்றத்தை கொண்டுள்ளது.
🔺🔻ஒரு பழம் 700 – 800 எடை கொண்டுள்ளது. இதனுடைய சுவை தர்பூசணி மற்றும் PERRI பழத்தை போன்று இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டுள்ளது. மேலும் இந்த பழத்தில் எந்த விதமான ரசாயன பொருட்களும் கலப்பதில்லை. அந்தவகையில் டிராகன் பழத்தின் நன்மைகள் பற்றிப் பார்க்கலாம்.
🎈டிராகன் பழத்தில் கரோட்டின் Lycopene போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் புற்றுநோய்கள் உடலை தாக்காமல் பாதுகாத்து கொள்கிறது. மேலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகள் உடலில் வளராமல் தடுக்க உதவுகிறது. புற்றுநோய் உருவாகும் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது.
🎈டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். இந்த அற்புத பழத்தை அடிக்கடி ஒருவர் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைப் சமநிலையில் பராமரிக்க பெரிதும் உதவி புரிந்து, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
🎈இப் பழம் இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது. அதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.
🎈சிவப்பு நிற சதைப் பகுதியைக் கொண்ட டிராகன் பழத்தில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டாலைன்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள சிறிய கருப்பு நிற விதைகளில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
🎈டிராகன் பழத்தில் ஒலிகோசாக்கரைடுகள் என்னும் ஒரு வகையான கார்போஹைட்ரேட் உள்ளது. இது ஃப்ளோரா போன்ற நல்ல பாக்டீரியாக்களின் வளரச்சிக்கு உதவி புரிந்து, மென்மையான செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
🎈உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ப்லேட்க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் டெங்கு போன்ற காய்ச்சலிலிருந்து விடுபடுவதற்கு இந்த பழம் உதவுகிறது.
🎈சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும். இது உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும் மற்றும் ஆரம்ப நிலை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்த பழம் பயனுள்ளதாக இருக்கும்.
🎈ரத்தசோகை உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான இரும்புசத்து அதிக அளவு இந்த பழத்தில் உள்ளதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் சுவாசித்தலுக்கு தேவையான ஆக்ஸிஜனை உடலில் கொண்டு சேர்க்கிறது.
🎈உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு மிக சிறந்த பழமாகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த டிராகன் பழத்தை சாப்பிடலாம்.
🎈தலைமுடி உதிர்விற்கு இந்தப்பழம் பெரிதும் நல்லது. மேலும் முடி நன்றாக வளர்வதற்கும் மற்றும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது.
🎈இந்த பழத்தில் இருக்கும் விதைகளில் புரதம், ஒமேகா 3, ஒமேகா 6 fatty acids உள்ளது. அதனால் இந்தப் பழத்தை அதன் விதைகளுடன் சாப்பிடுவது நல்லது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் சூட்டை தணிக்கும்.
🎈இந்த பழத்தில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் பற்கள் உறுதியாக இருப்பதற்கும் மற்றும் எலும்பு வலிமையாக இருப்பதற்கும், இந்தப்பழம் பயன்படுகிறது. Osteoporosis நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
🎈விட்டமின் சி அதிக அளவு இந்த பழத்தில் இருப்பதால் முகப்பரு, வயது முதிர்வை தடுக்கவும் மற்றும் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது.
🎈டிராகன் பழத்தில் பீட்டா கரோட்டீன் அதிகமாக உள்ளது. இது கண் புரை, மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சனைகளைத் தடுக்கிறது.
🎈டிராகன் பழத்தில் வைட்டமின் பி, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட்டுகளானது பிறப்பு குறைபாடுகளை தடுக்கும் மற்றும் கர்ப்ப காலத்தில் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். மேலும் இப்பழத்தில் கால்சியம் அதிகம் உள்ளதால், இது சிசுவின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவி புரியும்.
டிராகன் பழம் நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்